உடையாத கொலு பொம்மைகள்

By காமதேனு

துடுப்பதி ரகுநாதன்
tsragu123@gmail.com

சிதம்பரம் பூங்கா.

மாலை ஆறு மணிக்கு வழக்கமாகக் கூடும் அந்த ஐந்து முதிய நண்பர்களும், ஒதுக்குப்புறமாக இருக்கும் இரண்டு பெஞ்சுகளில் அமர்ந்து, அவரவர் வீடுகளில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். எல்லோரும் எண்பது வயதைத் தாண்டிவிட்டவர்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்று, இருபது வருடங்களுக்கு மேலாகப் பென்ஷன் வாங்கிக்கொண்டிருப்பவர்கள். பணியில் இருந்த காலத்தில் சம்பாதித்த வீடு, வாசல், பேங்க் பேலன்ஸை எல்லாம் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஓய்வுக்குப் பின் அவர்கள் சம்பாதித்த சுகர், பிரஷர், மூட்டு வலி, இடுப்பு வலிகளை இத்யாதிகளை மட்டும் சுமந்து திரிபவர்கள்.

கடந்த சில ஆண்டுகளாகப் பேசிவந்த அதே விஷயத்தை அன்றைக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் வீட்டில் கிடைத்துவந்த மரியாதையும் அன்பும், இப்போதெல்லாம் குறைந்துபோய்விட்டதைப் பற்றித்தான் அவர்களது பேச்சு இருந்தது.
“வர வர எங்க வீட்ல யாருமே என்னை மதிக்கிறல்ல… ஏதோ வேளாவேளைக்கு நாய்க்குச் சோறு போற மாதிரி தட்டைக் கொண்டுவந்து வச்சிட்டுப் போறா என் மருமக... வீட்ல பையன் இல்லன்னா அவ என்னை நடத்துற விதமே மாறிடுது… ஏதோ வேண்டாத பொருளைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறா…” சொல்லும்போதே குரல் உடையத் தொடங்கியது சுந்தரத்துக்கு.
திருமலை, சுந்தரத்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் அவர் ஒருவர்தான் மிகவும் வயது முதிர்ந்தவர். கிட்டத்தட்ட தொண்ணூறை நெருங்கும் வயதுக்காரர். எதையுமே பதற்றமில்லாமல் அணுகுபவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE