ஓட்டுநர் உரிமத்துடன் இன்று ஆஜராகுமாறு யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மதுரை போலீஸார் சம்மன்

By KU BUREAU

மதுரை: ஓட்டுநர் உரிம ஆவணங்கள், செல்போனுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு, யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு போலீ ஸார் சம்மன் வழங்கினர்.

பிரபல யூடியூபரும், பைக் ரேஸ் பிரியருமான டிடிஎஃப் வாசன் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். மதுரை வண்டியூர் புறவழிச் சாலையில் சென்றபோது, செல்போனில் பேசியபடி, வாகனத்தை இயக்கினார். மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை வாசன் மீறியதாகக் கூறி, 7 பிரிவுகளின் கீழ் அண்ணா நகர் போலீஸார் வழக்கு் பதிவு செய்தனர். கடந்த மே 30-ம் தேதி காலை டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீஸார், அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மதுரை நீதிமன்றத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர், 10 நாட்களுக்கு மதுரைஅண்ணா நகர் காவல் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று 6--வது குற்றவியல் நடுவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

அதன்படி, 3-வது நாளாகநேற்று டிடிஎஃப் வாசன்அண்ணா நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். அப்போது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும்செ்ல்போனுடன் ஜூன் 3-ம் தேதி (இன்று) காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அண்ணா நகர் போலீஸார் அவருக்கு சம்மன் அளித்தனர்.

ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின் வாகன உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பழகுநர் உரிமம் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE