குளங்களைத் தூர்வார கொண்டாட்டத்தை நிறுத்திட்டோம்!- நல்வழி காட்டும் நாடியம் கிராமம்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ளது நாடியம். இந்தக் கடலோர கிராமத்தின் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஒரு காலத்தில் கலர்ஃபுல் கொண்டாட்டமாக இருக்கும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று எங்கெங்கிருந்தோ ஆடல் - பாடல் குழுவினரை அரங்கேற்றி அமர்க்களப்படுத்திவிடுவார்கள். காவல் துறை தடுத்தால் நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கிவிடுவார்கள். ஆனால், இந்த முறை நாடியம் கோயில் திருவிழா மிக அமைதியாக, மிக மிக எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. கொண்டாட்டத்துக்குச் செலவிடும் தொகையை குளங்களைத் தூர்வாருவதில் செலவிடலாம் எனும் சமூக அக்கறைதான் இதற்கு அடிகோலியிருக்கிறது.

மாற்றத்துக்கு விதை போட்டவர்களை நாடி, நாடியம் சென்றிருந்தேன். இதைச் சாத்தியப்படுத்தியவர்களில் ஒருவரும், இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவருமான கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை முதலில் சந்தித்தேன்.

“எங்க கிராமத்துல இயல்பாவே படிச்சவங்க அதிகம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்ல உயர் பதவியில இருக்கிறவங்க, வெளிநாடுகள் வேலை பார்க்கிறவங்கன்னு நிறைய பேர் இருக்காங்க. ஓய்வு பெற்ற நீதிபதியும் குழந்தைக் கவியுமான குழ.முத்துவைரவன் எங்க ஊர்தான். சொல்லப்போனா ஊரே ரொம்ப செழிப்பானது. உண்மையான கடைமடையில இருக்கிறவங்க நாங்க. எங்க ஊரைத் தாண்டினா கடல்தான். முன்னெல்லாம், கல்லணைக் கால்வாய் புது ஆறு பாசனம் மூலமா எங்களுக்குத் தண்ணி கிடைச்சுது. ஆனா, காவிரிப் பிரச்சினை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நிறைய சிக்கல்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE