ஞாபகம்- செல்வராஜ் ஜெகதீசன்

By காமதேனு

கண் விழித்தவுடன் அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து மனதுக்குள் ஒரு அலை ஓடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக இருந்தாலும் முரளியின் நாட்கள் தொடங்குவது இப்படியே.

பல் விளக்கி, தேநீர் குடித்து முடிப்பதற்குள் செய்ய வேண்டியவை குறித்த ஒரு கால அட்டவணை மனதுக்குள் தயாராகியிருக்கும்.

இன்றைய முதல் வேலை, டாக்டர் செக்-அப். காலை எட்டரை மணிக்கு அப்பாயின்மென்ட்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் பார்த்து, மாத்திரைகள் வாங்கி வர வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தோடு கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைச் சோதித்தறிய வெறும் வயிற்றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சாம்பிள் கொடுத்துவிட்டு வர வேண்டும். தேநீர், தண்ணீர் ஏதும் உள்ளே போகாமல், இன்று வெறும் வயிறோடு போக வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE