வன்னிய மக்களிடம் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: வெடிக்கும் வேல்முருகன்

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

எடுத்த சபதம் முடித்த சந்தோஷத்தில் இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆம், இந்தத் தேர்தலில் பாமகவை எப்படியும் வீழ்த்தியே தீருவது என்பது அவர் எடுத்த தீர்மானம். அந்தப் பணி முடிந்துவிட்டாலும் அடுத்தகட்ட பணிகள் அவரைத் துரத்துகின்றன. கட்சியின் உயர்மட்டக் குழுவைக் கூட்டும் அவசரத்தில் இருந்த அவரை காமதேனு இதழுக்காகச் சந்தித்தேன்.


மோடியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்கிறது. அதிபர் ஆட்சி முறையில்கூட அதிகாரிகள், அமைச்சர்களிடம் கருத்தறிந்துதான் செயல்படுவார்கள். ஆனால், மோடி அப்படிச் செய்வதில்லை. மோடி என்ற ஒற்றைச் சர்வாதிகாரத்தை நோக்கித்தான் இனிவரும் ஐந்தாண்டுகால ஆட்சியும் நடைபெறும்போல் தெரிகிறது.


திருமாவளவன், அன்புமணி போட்டியிட்ட தொகுதிகளில் நீங்கள் பிரச்சாரம் செய்யவில்லையே?
அதெல்லாம் ஒன்றுமில்லை. திருமாவளவனுக்காக அரியலூரில் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஏதோ காரணங்களுக்காகக் கூட்டத்திற்கு கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீஸ் ரத்து செய்துவிட்டது. ஆனாலும் எனது பேச்சை ஒலிநாடா மூலம் ஒலிபரப்பி பிரச்சாரம் மேற்கொண்டார்கள். தருமபுரியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி எனது பிரச்சாரத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE