பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

தஞ்சாவூர்
வீட்டு கிச்சனில் கணவனும் மனைவியும்...

``என்னம்மா டிபன் பண்றே தோசையா... ஆப்பமா?”
``அடை போடுறேங்க…”
``சரிதான்… நீ இளையராஜா பாட்டு பாடுறப்பவே நினைச்சேன்…”
“எப்படி?”
“பின்னே… அவர் பாட்டு எல்லாமே ‘அட’ போட வைக்கிற பாட்டாச்சே…”
“சும்மாருங்க... இன்னும் கிச்சன்ல வந்துதான் அவர் ராயல்டி கேக்கல... இங்கயும் வந்துடப் போறாரு”
      - தஞ்சை, தாமு


மதுரை
ஆரப்பாளையம் சலூனில் இருவர்...


``அண்ணே 9 பெரிசா... 13 பெரிசா?’’
``9 தான் பெரிசு’’
``அதெப்படிண்ணே?’’
``அண்ணே பத்தாப்பு ஃபெயிலாயிட்டு பிளஸ் டு சேர முடியாம வீட்டுலயே தவிக்கிறது பெரிசா... எட்டாப்பு பாஸாயி, ஜம்முனு பள்ளிக்கூடத்தை கன்டினியூ பண்றது பெரிசா?’’
``அப்ப எட்டாப்பு பாஸ்தான்யா பெரிசு!’’
அருகில் உள்ள ஒருவர்...
``இப்படியே வெட்டித்தனமா பேசிக்கிட்டே இருக்காம போய் பொழப்பப் பாருங்கடா’’
(கப் சிப் ஆகின்றனர் இருவரும்)
       - மதுரை, பாளைபசும்பொன்


அரூர்
பேக்கரியில் இரு கரை வேட்டிகள்...


``என்னப்பா தேர்தல் முடிவு இப்படி ஆகிப்போச்சே...''
``ஆமாடே... மாம்பழம் பழுக்குமுன்னு ஓடியாடி வேலை செஞ்சா கடைசியில வெம்பியேப் போச்சே...''
``அது இயற்கையாவே பழுக்கிற வரைக்கும் காத்திருந்து இருக்கலாம். இப்படி கல்லைப் போட்டு பழுக்க வைக்கலாம்னு ஆசைப்பட்டதுதான் தப்புனு நினைக்கிறேன்.”
``ஒட்டு மாம்பழத்துக்கும் வோட்டு மாம்பழத்துக்கும் அப்ப ஒரே ரூல்ஸ்தாங்கறே...?”
அரூர், வெ.சென்னப்பன்

மதுரை
கூடலழகர் பெருமாள் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பேசிக்கொண்டிருந்த பெண்களிடம் வயதான பெண்மணி ஒருவர்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE