ஹாட் லீக்ஸ்: சின்னம்மா சொன்ன யோசனை

By காமதேனு

போலீஸ் வந்துருச்சுண்ணே..!

கொடுத்த பணமெல்லாம் என்னாச்சு என்று குழம்பிக் கிடக்கிறார் தினகரன். ஆனால், பல இடங்களில்  அவரது  கட்சிக்காரர்கள்  நூதன முறையில் பணத்தைச் சுருட்டி இருக்கிறார்கள். கோவை நகர்புறத்தில் வட்டச் செயலாளர் ஒருவரிடம் 500 ரூபாய் வீதம் 350 ஓட்டுக்குப் பணம் கொடுத்திருந்தார்களாம். பேருக்கு சிலருக்குப் பட்டுவாடா செய்த அந்தச் செயலாளர், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக தாமே போலீஸுக்கு துப்புக் கொடுத்தாராம். உடனே, போலீஸ் அலறிக்கொண்டு வரவும், “அண்ணே... 345 பேருக்குப் பணம் குடுத்துட்டேன். மீதி அஞ்சு பேருக்கு குடுக்குறதுக்குள்ள போலீஸ் வந்திருச்சு. இந்தாங்க மீதி பணம்” என்று சொல்லி 2500 ரூபாயை வேட்பாளரிடம் கொடுத்தாராம். அந்த வண்டு முருகனின் வண்டவாளத்தை விசாரித்துப் பார்த்து மிரண்டுபோன வேட்பாளர், அவரையும் இப்படிச் சொன்ன இன்னும் சிலரையும் ஆள்வைத்து மிரட்டி பணத்தைப் பிடுங்கினாராம் !

598-ல் அமமுக ஜீரோ!

தமிழகத்தில் 31 மக்களவைத் தொகுதிகளில் 598 வாக்கு இயந்திரங்களில் அமமுகவுக்கு ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை என்று  கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும்  பல  இடங்களில் ஒன்று, இரண்டு என்ற  எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவில் அமமுகவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறதாம்.  குறிப்பாக,  பதிவு  மதுரை மாவட்டம் மேலூரில் தினகரனின் தீவிர விசுவாசியாக இருந்து மறைந்த முன்னாள் எம்எல்ஏ-வான சாமியின் வீடு இருக்கும் தெருவில் அமமுகவுக்கு விழுந்த ஓட்டுகள் இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லையாம். அங்கு மட்டுமே இருநூறு ஓட்டுகளுக்கு மேல் பதிவாகி இருக்க வேண்டுமாம். இதனால் அதிர்ந்து கிடக்கும் தினகரன் முகாம், எஞ்சிய 7 தொகுதிகளிலும் ஆய்வைத் தொடர்கிறது. அனைத்து  முடிவுகளும் முழுமையாகக் கிடைத்த  பிறகு  நீதிமன்றத்தை  நாடப்போகிறார்களாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE