அமுல் பேபின்னா அஞ்சாறு லட்சம்!- திகிலூட்டும் குழந்தை வியாபாரம்!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்

பணத்துக்காக குழந்தைகளை விற்ற பாதகமும் இந்த விவகாரத்தில் புரோக்கர்களாகச் செயல்பட்ட ஆண், பெண்களின் தொடர் கைதுகளும் ஒட்டுமொத்த தமிழகத்தையே திகைப்பில் தள்ளியிருக்கிறது!

‘‘ஆரோக்கியமானது போதுமா... அழகா கொழுகொழுன்னு சிவப்பா வேணுமா? கறுப்பு குழந்தைன்னா விலை கம்மி, அதுவே அழகா அமுல் பேபி மாதிரின்னா அஞ்சாறு லட்ச ரூவா வரும்’’ அமுதவள்ளி என்கிற புரோக்கர் பேரம் பேசிய இந்த ஆடியோதான் குழந்தைகள் விற்பனைபயங்கரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததுருப்புச் சீட்டு. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை வைத்து நாமக்கல் சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் போலீஸில் புகார் செய்ய புரோக்கர்கள் கைது நடவடிக்கைகள் தொடங்கின.

ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம், திருச்செங்கோடு பவானி உள்ளிட்ட சுகாதார மையங்களில் ஆயா மற்றும் துணை செவிலியராக பணியாற்றியவர் அமுதவள்ளி. குழந்தையை வளர்க்க முடியாத வறியவர்களிடமும் திருமணமாகாமல் தாயாகிவிடும் பெண்களிடமும் குழந்தைகளை வாங்கி அதை மற்றவர்களிடம் லட்சங்களுக்கு விற்று காசு பார்த்திருக்கிறார் அமுதவள்ளி. இந்தத் தொழிலில் வருமானம் கொழித்ததால் 2012-ல் விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு குழந்தை வியாபாரத்தில் முழு நேரமாய் இறங்கிவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE