மாபெரும் கலைஞனின் மகத்தான படைப்பு!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

உலகின் மிகப் புகழ்பெற்ற மிகப்பெரிய பிரம்மாண்ட தேவாலயங்களில் முதன்மையானது வாட்டிகனில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம். இங்குள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை, ஒரு வரலாறு உண்டு.

அவற்றில் மிக முக்கியமானது தேவாலயத்தின் முன் இருக்கும் பியேட்டா (Piet) சிலை. இதை Mother and Child (தாயும் சேயும்) என்று அழைக்கிறார்கள். சிலுவையில் அறையப்பட்டு இறந்துபோன ஏசுவை அவரது தாய் மேரி தன் மடியில் கிடத்தியிருக்கும் இந்தச் சிலையை வடித்தது இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தின் மாபெரும் கலைஞன் மைக்கேல் ஏஞ்சலோ என்கின்றனர் பெரும்பான்மையினர்.

முன்பு இந்தச் சிலையை ஒரு சிறு கோயிலில்தான் வைத்திருந்தனர். சிலையின் அழகையும் கலை நுணுக்கத்தையும் பார்த்தவர்களெல்லாம் புகழ்ந்து தள்ளினர். அப்போது பார்வையாளர் ஒருவர் கிறிஸ்துபரோ சொலாரி என்பவர்தான் இதைச் செதுக்கினார் என்று மைக்கேல் ஏஞ்சலோ காதுபடவே பேசினாராம். இதனால், கோபமடைந்த அவர், இரவோடு இரவாக ‘புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த மைக்கேல் ஏஞ்சலோ போனோரோட்டி செதுக்கிய சிலை’ என்று இலத்தீனில் பொறித்துவிட்டாராம்.

இந்தச் சிலையை செதுக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டாராம் ஏஞ்சலோ. இதற்கு முன்பும் சிலர் இந்தக் காட்சியைச் செதுக்கியிருக்
கிறார்கள். ஆனால், அவையெல்லாம் தாய் மேரியை வயதானவராகவும், ஏசுவை குற்றுயிரும் குலையுயிருமாகத் துன்பப்படுவது போலவும் வடிக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE