சுரேஷ்கோபியைச் சுருட்டும் ராகுல் அலை! திருப்பத்துக்குத் தயாராகும் திருச்சூர்!

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்ற ஒரே தொகுதி திருச்சூர். இங்கு வெற்றிபெற்று ஒட்டுமொத்த இந்தியாவுக்குமாய் கட்சியின் ஒரே எம்பியாக மக்களவைக்குச் சென்ற ஜெயதேவனுக்கு இந்த முறை சீட் இல்லை. அதே திருச்சூரில்தான் பாஜக வேட்பாளராக நடிகர் சுரேஷ்கோபி ஓட்டு வேட்டையாடி வருகிறார்.



இப்போது ராஜ்யசபா எம்பி-யாக இருக்கும் சுரேஷ் கோபியை ஸ்டார் வேட்பாளராகக் களத்தில் இறக்கி இருக்கிறது பாஜக. திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்எல் ஏ-வுமான டி.என்.பிரதாபன் இவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கடந்த முறை கட்சியின் மானம் காத்த ஜெயதேவனுக்கு சீட் மறுத்த சிபிஐ, மாநில செயற்குழு உறுப்பினரும், கட்சி ஏடான ஜனயுகத்தின் ஆசிரியருமான ராஜாஜி மேத்யூ தாமஸை இங்கே நிறுத்தியிருக்கிறது.

சீட் மறுக்கப்பட்டதால் முதலில் நியாயம் கேட்டு கொந்தளித்த ஜெயதேவன், இப்போது கட்சிக் கட்டுப்பாட்டை மதித்து தாமஸுக்கு வாக்குக் கேட்டு வருகிறார். பாஜக முதலில் இந்தத் தொகுதியைக் கூட்டணிக் கட்சியான பாரத் தர்ம ஜனசேவாவுக்கு தான் ஒதுக்கியது. அந்த அமைப்பின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி இங்கு போட்டியிடலாம் எனச் சொல்லப்பட்டது. ஈழவ சமூகத்துக்குக் குரல் கொடுக்கும் தனக்கு அந்தச் சமூகத்தின் வாக்குகள் கைகொடுக்கும் எனக் கணக்குப் போட்டார் துஷார். ஆனால், ராகுல் காந்தி வயநாட்டுக்கு வருகிறார் என்றதும் அவரை எதிர்க்க பெருந்தலைகள் யாரும் கேரளத்தில் இல்லாததால், துஷாரை வயநாட்டுக்கு நகர்த்தியது பாஜக. வயநாட்டிலும் ஈழவ சமூக வாக்குகள் கணிசமாக இருப்பதே இதன் காரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE