அடுத்தவர் புன்னகை- ஷங்கர்பாபு

By காமதேனு

என்னவோ தெரியவில்லை, அன்று காலையிலிருந்தே பிரபுவுக்கு மனிதர்கள் புரியும் பாவங்கள் பற்றிய அறிவு கிடைத்துக்கொண்டே இருந்தது. இதுவரை கேள்விப்பட்டிராத, இப்படியெல்லாம்கூட பாவச்செயல்கள் இருக்குமா என்று எண்ணத்தக்க பாவங்கள். "அது சரி, மனிதர்களின் எண்ணங்களும் வாழ்க்கை முறையும் மாறும்போது அதற்கேற்ப பாவங்களின் பட்டியலும் மாறித்தானே ஆகவேண்டும்?" என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

இப்படித்தான் அவனுள் நவீன பாவங்களின் அறிமுகம் துவங்கியது. காலையில் எழுந்ததும் மனிதர்களின் கடமைகளிலும், காலைக்கடன்களிலும் ஒன்றான செல்லை எடுத்து வாட்ஸ்-அப் பார்த்து அன்றைய தினத்தைத் தொடங்குகையில் மனைவியின் வசவுகளுக்கு ஆளானான்.

அவள் காலையிலேயே துணி துவைத்து, களைத்து வருகையில் ஒரு ஜீவன் வாட்ஸ்-அப்பில் மூழ்கிக் கிடந்ததைப் பார்த்துக் கண்டபடி  திட்டி  இப்படி  முடித்தாள். "பொண்டாட்டி  மாங்கு மாங்குன்னு வேலை பாத்துக்கிட்டு வர்றப்ப அவளுக்கு உதவாம, செல்லை நோண்டிட்டு இருக்கறது  மாதிரி பாவச்செயல் உலகத்துலயே கிடையாதுங்க."

பையனைப்  பள்ளிக்கு அனுப்பிவிட்டுத்  திரும்பும்போது  வீட்டில் ஒழுகிக்கொண்டிருந்த  குழாய்  ரிப்பேர் செய்ய ஒரு  இளைஞன்  வந்திருந்தான்.ஏற்கெனவே பிரபு அவனுக்குத் தெரிந்த நூல் சுற்றல், விசித்திர கோணங்களில் நல்லியைச் சுற்றுதல் போன்ற வழிகளைப் பயன்படுத்தினாலும், குழாய் இதுபோன்ற பாட்டி வைத்தியங்களுக்கு செவி சாய்க்காமல் தனக்கு  நிபுணரே தேவை என்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE