ஈரோடு: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, குமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்செய்கிறார். தேர்தல் ஆணையம்அவரது கைப்பாவையாக இருக்கிறது. இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது.
ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்ட்டில்தான் நானும்படித்தேன். அங்குள்ள சர்ச்சில் அவர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம்செய்தது எனக்குத் தெரியும். அதேபோல, முஸ்லிம்களின் இஃப்தார் நோன்பிலும் பங்கேற்றுள்ளார். இவ்வாறு எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உடையவர் ஜெயலலிதா. அவரை குறுகிய வட்டத்தில் அடைக்கப் பார்க்கிறார் அண்ணாமலை. தேர்தல் முடிவு வரும்போது, அண்ணாமலை எங்கு இருப்பார் என்பதை உறுதிசெய்துகொண்டு, பிறகு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம்.
மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலினும், ராகுலும் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் பிரதமராக வர வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ஒரு பிரதமர்என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறார். தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யானால், அவரும் பிரதமராக வர வாய்ப்பிருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர் என்பது நடைமுறைக்கு வராது.ஒருவேளை அப்படி வந்தால், யாருக்கு நஷ்டம்? 10 ஆண்டுகளாக ஒருவரே பிரதமராக இருந்தும், யாருக்கும் பயனில்லை.