கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்த கையோடு, “மருத்துவராகி சேவை செய்வதே என் எதிர்கால லட்சியம்” என்று பேட்டி கொடுத்தவர்களில்கூட ஒன்றிரண்டு பேர் சாதித்துவிடுகிறார்கள். ஆனால், பள்ளி நாட்களில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றுவிட்டு தங்களை சச்சினாகவும், பி.வி.சிந்துவாகவும் கற்பனை செய்கிறவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போய்விடுகிறது. மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் நாகராஜன் இதற்கு விதிவிலக்கு!