பதிலுக்குப் பதிலல்ல

By காமதேனு

 ஹரணி
uthraperumal@gmail.com

எண்பது வயது ஆகிவிட்டது தனபாக்கியத்துக்கு. ஆறு மாதங்களுக்கு முன்பு எண்பது தொடங்கியபோது முடங்க ஆரம்பித்துவிட்டாள் தனபாக்கியம். வேடிக்கையாக ஓடுகாலி என்பார்கள். இதற்குத் தவறான பொருள் அல்ல. எந்நேரமும் நடந்து கொண்டேயிருப்பாள் தனபாக்கியம். ``கடுகு மறந்துபோச்சு'' என்பாள். ``ஜாக்கெட் தைக்கக் கொடுத்தேன் வாங்க மறந்துட்டேன். நாளைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போவணும். அவங்களுக்கு வாய்க்கு ருசியா கதம்ப பக்கடா வாங்கப்போறேன். இப்பத்தான் போடுவான். சூடா இருக்கும்'' இப்படி ஏதாவது ஒரு காரணத்தைச் சத்தம்போட்டு சொல்லிக்கொண்டே வீட்டுக்கும் கடைத்தெருவுக்குமாக ஒரு நூறு முறையாவது ஒரு நாளைக்கு நடந்துவிடுவாள்.
நல்ல கண்பார்வை. சர்க்கரை வியாதி இல்லை. பிரஷர் இல்லை. உடலில் கொழுப்பு இல்லை; ஆனால், வாயில் இருந்தது. நன்றாக எடக்குப் பேச்சு பேசுவாள், ஆள் இளப்பமாக மாட்டிக்கொண்டால்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE