பேசிக்கிட்டாங்க

By காமதேனு

வடபழனி
தனியார் மருத்துவமனை வாசலில் ஒரு தம்பதி...

 “டாக்டர்தான் எல்லா டெஸ்ட்டையும் பார்த்துட்டு ‘ஒண்ணுமில்லை’ன்னு சொல்லிட்டாரே, அப்புறமும் ஏன் மூஞ்சியை உம்முன்னு தூக்கி வச்சிட்டு இருக்கீங்க?”

 “ம்... என் பர்ஸை ஒண்ணுமில்லாம ஆக்கிட்டுல ‘ஒண்ணுமில்லை’ன்னு சொன்னாரு!”

 “ம்க்கும்! இருக்கிற கஷ்டம் போதாதுன்னு டாக்டர் வேற, ‘நோய் இருக்கு’ன்னு சொல்லணும்ன்னு ஆசைப்பட்டீங்களாக்கும்?’’

சென்னை, எ.எம்.முகமது ரிஸ்வான்

அரூர்
ஹோட்டல் ஒன்றில் கணவனும் மனைவியும்...

``என்னங்க... சாம்பார்ல காரம் அதிகமாக இருக்கு. இப்படி சாப்பிட்டா அல்சர் வந்திடுமே..?''

``செத்துப்போன நாக்கை பிழைக்க வைக்கத்தான்டி இந்த ஹோட்டலுக்கு வந்திருக்கேன். இன்னிக்கு ஒரு நாளாச்சும் நீயும் ருசியா சாப்பிடு..!''

``செத்துப்போன நாக்குதான் இப்படி சுள்ளு சுள்ளுனு பேசுதாக்கும். வீட்டுக்கு வாங்க பேசிக்கறேன்!''

``மறுபடியும் மொதல்ல இருந்தா..!''

- அரூர், வெ.சென்னப்பன்

மதுரை
கோவை செல்லும் பேருந்தில் பயணிகள் இருவர்...


(தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பியபடியே... மற்றவர்)

``அண்ணாச்சி... அண்ணாச்சி ...மதுரை வந்தாச்சு... நான் போயிட்டு வர்றேன்... என்னிக்காவது சந்திக்கலாம்''

(திடுக்கிட்டு எழுந்தவர்) "யோவ்... என்னையா நீரு... ஏதோ ‘டைம் பாஸு’க்காக ஒரு ரெண்டு மணி நேரம் பேசுனதுக்குப் போய், இந்த நட்ட நடு ராத்திரில எழுப்பி விட்டுட்டு, போயிட்டு வர்றேனு சொல்றீரு... உமக்கே இது ஓவரா தெரியல?"

``ஒரு மரியாதைக்காக போயிட்டு வாறேன்னு சொன்னேன். கோபப்படாதீங்க...''

``உம்ம மரியாதையும் மண்ணாங்கட்டியும் யாருக்கு வேணும்? இடம் வந்தால், இறங்கிப் போறத விட்டுட்டு...''

பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி

காவேரிப்பாக்கம்
பேருந்து நிலையத்தில் இரண்டு நண்பர்கள்...


``டேய் கார்த்தி என்னோட ரேஷன் கார்டுல இருக்கற போட்டோவைப் பார்த்தியா? பத்து வருஷத்துக்கு முன்னா
லயே நான் எவ்வளவு அழகா இருக்கேன்னு தெரிஞ்சிக்கோ!''

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE