டாக்டர் கு. கணேசன்
எனக்கு ஓர் ஆதங்கம் உண்டு. நம் மக்கள் சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக்கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறார்கள்; ஆனால், சர்க்கரை நோய் விஷயத்தில் ஏன் இத்தனை அலட்சியமாக இருக்கிறார்கள் என்று.
இத்தனைக்கும் ‘சர்க்கரை நோய் ஒருவருக்கு ஏற்படலாம்’ என்பதை அவரது உடலே எச்சரிக்கிறது. அந்த அலாரம்தான் `ப்ரிடயாபிடிஸ்' எனப்படும் ‘சர்க்கரை நோயின் ஆரம்பநிலை’. ஆனால், அந்த அலாரத்தைப் பெரும்பாலானோர் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். அதனாலேயே சர்க்கரை நோய் எனும் ‘புதைகுழி’க்குள் விழுந்து விடுகிறார்கள். அவர்கள் மட்டும் அந்த ‘அலார ஒலி’யில் உஷாராகி, சென்ற வாரம் அறிமுகமான அரங்கநாதனைப் போல் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டால், அந்தப் ‘புதைகுழி’க்குள் விழாமல் தப்பிக்கவும் முடியும்.
சரி, அரங்கநாதன் அப்படி என்ன செய்தார்? அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன். அவரைப் போல் சிரமேற்கொள்ள நீங்களும் தயார் என்றால் அடுத்த பாராவுக்குச் செல்லுங்கள்.
முப்படைகள் முக்கியம்!