ஒருவன்- கனகராஜன்

By காமதேனு

சண்முகத்துக்கு இப்போது அவசரமாக ஒரு ஐந்நூறு ரூபாய் தேவைப்படுகிறது. காந்தி சிலை சிக்னல் அருகே வங்கியின் வாசலில் உள்ள மரத்தடி நிழலில் நின்றுகொண்டிருந்தான். வந்து ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அக்கா போன் செய்து தகவல் சொன்னாள். சாயங்காலம் நான்கு மணிக்கு டாக்டரைப் பார்க்க வருகிறார்களாம். 

எதற்கும் ஒரு ஐந்நூறு ரூபாயை எடுத்து வை என்று சொல்லியிருந்தாள்.

கிணத்துக்கடவிலிருந்து ஐந்நூறு ரூபாயோடு கணேசன் வந்துகொண்டிருக் கிறான். கோயில்பாளையத்தை நெருங்கி விட்டதாக இப்போதுதான் போனில் சொன்னான்.

சண்முகம் கடைவீதியில் ஒரு ஃபேன்சி கடையில் வேலை பார்க்கிறான். கணேசனும் அதே கடையில் இவனோடு வேலை பார்த்தவன்தான், நான்கு மாதங்களுக்கு முன்னால் கணேசனுக்குக் கல்யாணம் முடிந்தது. ஃபேன்சி கடைச் சம்பளம் போதவில்லையென்று கிணத்துக்கடவில் ஏதோ ஒரு வொர்க் ஷாப் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அங்கேயே குடியும் போய்விட்டான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE