அடுத்த முதல்வர்  என்பதில்  உடன்பாடில்லை! -திருமாவளவன் பேட்டி!

By காமதேனு

சென்னை வேளச்சேரியில் இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வீடு. பத்துக்கு பத்தடி இருக்கிற அறை. ஓர் ஆள் நன்றாகக் கால் நீட்டி படுக்கிற அளவிற்கான கட்டிலில் நிரம்பி வழிகின்றன புத்தகங்கள்.

கட்டிலுக்கடியில், பீரோ மேல் என அடுக்கடுக்காய் புத்தகங்களும், சுவற்றில் மாட்டப்பட்டிருக்கின்ற சந்தன மாலைகளும் சேர்ந்து ஒருவிதமான கலவையான சுகந்தத்தைத் தருகின்றன. அம்பேத்கரும், புத்தரும் அறையெங்கும் சின்னஞ்சிறு புகைப்படங்களாக சூழலுக்கு ரம்யம் கூட்டுகிறார்கள்.



“இவன் ஒழுங்கா காலேஜுக்குப் போக மாட்டேங்கறான் தலைவரே. அட்டெண்டென்ஸ் இல்லைன்னு பரீட்சை எழுத அனுமதிக்க மாட்டேங்கறாங்க” என்று தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை இழுத்து அறிமுகப்படுத்துகிறார் ஒரு தகப்பன்.

ஹெட்மாஸ்டரிடம் சிக்கியது போன்ற தவிப்பும், தயக்கமும் கலந்த நடையில் திருமாவின் இழுப்பிற்கு மெல்ல முன் வருகிறான்.
“படிப்புதாண்டா வாழ்க்கை...” என்று பேசியபடியே அவனைத் தனியே அழைத்துச் சென்று 10 நிமிடம் பேசுகிறார். இப்போது இருவருமே மலர்ச்சியாகத் திரும்பி வருகிறார்கள். முன்னிலும் மாணவன் முகத்தில் தெளிவும், மலர்ச்சியும்.

“பையனைத் திட்டாதீங்க... அடுத்த முறை வரும்போது இவனோட மதிப்பெண் பட்டியலையும் மறக்காம எடுத்துட்டு வாங்க” எனப் பேசி அப்பாவையும் பிள்ளையையும் அனுப்பி வைக்கிறார்.

அடுத்து, டிசம்பரில் நடக்கும் திருச்சி மாநாட்டுக்கான போஸ்டர் டிசைனைக் காட்டி ஒப்புதல் பெறுகிறார்கள் தொண்டர்கள். அதில் ஒரு சில திருத்தங்களைச் சொல்லிவிட்டு நம்பக்கம் திரும்புகிறார் திருமா.

‘காமதேனு’ இதழுக்கான பேட்டி ஆரம்பமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE