மஹா
readers@kamadenu.in
‘‘இந்த மாதிரி ஒரு மாடலிங் நிகழ்ச் சின்னும், அதுவும் போன்கூட இல்லாமல் 45 நாட்கள் ஒரே வீட்ல இருக்க ணும்னும் சொன்னப்போ முதல்ல பயங்கர யோசனையா இருந்துச்சு. சன் நெட்வொர்க் டெலிகாஸ்ட், பிரசன்னா மாதிரி ஒரு நடிகர் ஆங்கரா இருக்கார்னு ஒவ்வொரு மெரிட்டா சேனல் தரப்புல வரிசைபடுத்தினப்போதான் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சிக்குள்ள வர எனக்கு ஆர்வம் அதிகமாச்சு’’ என்று சொல்லும்போதே சான்டனாவின் முகத்தில் அத்தனை ஜொலிப்பு!
ஒரு நேரத்தில் கருப்பு வெள்ளை பாடல்கள் மற்றும் படங்களால் நிறைவைத் தந்த சன் லைஃப் சேனல் இப்போது புதுப் புது நிகழ்ச்சிகளால் வண்ணம் கூடியிருக்கிறது. அதில் ஒன்று, ‘சொப்பன சுந்தரி’ மாடலிங் ஷோ. பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இதன் போட்டியாளர்களில் முதல் மூவரில் ஒருவராக தற்போது இருந்து வருகிறார் சான்டனா. நிகழ்ச்சி அனுபவம் குறித்து அவரிடம் இன்னும் கொஞ்சம் பேசினேன்.
இதுவும் ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சி மாதிரி தெரியுதே?
ஷோல நாங்க இருக்குற வீட்டைப் பார்க்கும்போது அந்த மாதிரி ஒரு எண்ணம் வரலாம். மற்றபடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இதுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இருக்காது. ‘சொப்பன சுந்தரி’ ஷோ ஹவுஸ்ல தூங்கி எழுந்திருக்கிற வேலை மட்டும்தான் செய்றோம். மற்றபடி போட்டோ ஷூட் உள்ளிட்ட எல்லாமே வெளியிலதானே ஷூட் பண்றோம்.
நடிகர் பிரசன்னா, நடிகைகள் பார்வதி நாயர், சாக் ஷி அகர்வால் ஆகியோரது கண்டிப்பு, கவலை இதெல்லாம் செயற்கையாகவும், டிஆர்பி ரேட்டிங்கிற்காக செய்வது போலவும் இருக்கிறதே?
நடிகர் என்பதைத் தாண்டி பிரசன்னாவுக்குன்னு வெளியே ஒரு அடையாளம் இருக்கிறது. நான் முன்பே சொன்னதுபோல நாங்கள் எல்லோரும் இங்கே இருக்க முக்கியக் காரணம் அவர் மாதிரி ஒருவர் ஆங்கரா இருக்கார்னுதான். ரொம்ப புரொபஷனல் வேலைக்காரர். அப்படி இருக்கும்போது எதுக்கு டிஆர்பி பற்றி எல்லாம் யோசிக்கணும். பார்வதி நாயர், சாக்ஷி இருவருமே ரொம்பத் திறமைசாலிங்க. நிகழ்ச்சியோட போக்குக்குத் தகுந்த மாதிரி பேசுவாங்க. அவங்க ரெண்டு பேரும் ரெண்டு டீமைக் கவனிக்கிறாங்க. சமீபத்துலகூட அவங்களுக்குள்ள சண்டை வந்தது. நாங்களே பயந்துட்டோம். இதெல்லாமே நிஜம்தான். நிகழ்ச்சியை முழு ஈடுபாட்டோட கொடுக்கணும்னுதான் அப்படி உழைக்கிறோம். இதுல மேஜிக் எல்லாம் எதுவுமே இல்லை.
இறுதிச்சுற்று எப்போது?
12 தொடர்களைக் கடந்தாச்சு. ஷோ ஹவுஸ்ல நாங்க இருந்த 45 நாட்களில் 20 தொடருக்கான ஷூட் முடிந்தது. இன்னும் 7 நாள் ஷூட் மீதமிருக்கு. இப்போ வரைக்கும் 3 பேர் எலிமினேட் ஆயிருக்காங்க. அப்பப்போ நான் ரெண்டாவது மூணாவது, முதலாவது என ரேங்க் மாறி மாறி வர்றேன். மாடலிங் நிகழ்ச்சின்னு உள்ளே வந்து இங்கே டான்ஸ், நடிப்புன்னு செம திரில்லிங்கா இருக்கு. நல்லா அனுபவிக்கிறோம்னே சொல்லலாம். இறுதிச்சுற்று எப்பன்னு இன்னும் சில வாரங்களில் தெரிய வரும். அதுவரைக்கும் என்ஜாய் பண்ணுவோம்.
இறுதிச்சுற்று வெற்றியாளருக்கு சினிமா வாய்ப்பு உண்டாமே?
ஃபைனலில் செம சர்ப்ரைஸ் கிஃப்ட் இருக்குன்னு தெரியும். அதை பிரசன்னாதான் சொல்லுவார். நான் உள்ளிட்ட என்னோட டீம் எல்லோருமே நல்ல உழைப்பைக் கொடுக்குறோம். சினிமாவுல வர்றதுக்கு முன்னாடி ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு மாதிரி அனுபவத்தோட வருவாங்க. இதுல கலந்துக்கிட்டவங்க சற்று வித்தியாசமான அனுபவத்தோடத்தான் உள்ளே வரப் போறோம்.
இது நட்பின் கதை