கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையிலிருந்து 5-வது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காந்தவயல். மலைகள் சூழ்ந்த இந்தக் கிராமத்தின் நடுவே ஏரிக்கரையைப் போல் நீள்கிறது சின்னஞ்சிறு தார் சாலை. ‘இதையும் கபளீகரம் செய்துவிடவா’ என்று கேட்பதுபோல் இருபுறமும் தளும்பி நிற்கும் வெள்ளம் அந்தச் சாலையை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
சாலை நீண்டு சென்று சரிகிற இடத்தில் ஒரு பரிசல். பரிசலுக்குப் போகும் வழியில் வரிசைகட்டி நிற்கின்றன டூ வீலர்கள். அக்கரையிலிருந்து பரிசலில் வந்திறங்குபவர்கள் வாகனத்தைக் கீழிறக்க... இன்னொரு குழு இங்கிருந்து அக்கரைக்குப் பரிசலில் பயணிக்க வாகனத்துடன் தயாராய் நிற்கிறது.