என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை!

By காமதேனு

என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை!

மதுரை ஆதீன மடத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா 2012 ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து பக்தர்கள் தொடர்ந்த வழக்கில் அவரது நியமனத்துக்குத் தடைவிதித்தது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம். இப்போது மதுரை உயர் நீதிமன்ற கிளை அந்தத் தடை செல்லாது என்று கூறிவிட்டது. இதனால் சட்டப்படி நித்யானந்தா 293-வது ஆதீனமாகத் தொடர்கிறார். ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குள் நுழையவும், பூஜை செய்யவும் இதே உயர் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றிருக்கிறார் நித்யானந்தா. இவ்விரண்டு தீர்ப்புகளையும் கையில் எடுத்துக்கொண்டு நித்தி எந்த நேரத்திலும் ஆதீன விஜயம் செய்யலாம். அப்படி அவர் கிளம்பி வந்தால் மதுரையின் நித்திரை கெட்டு மீண்டும் போஸ்டர், போராட்டம், நித்யானந்தா பக்தைகளின் சாபம் என்று நான்மாடகூடல் நாஸ்தி ஆகிவிடும். நித்யானந்தாவுக்குப் பதிலாக இன்னொருவரை இளைய ஆதீனமாக அருணகிரிநாதர் நியமித்ததும் செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியிருப்பதால், ஆதீனகர்த்தர் அடுத்து என்ன செய்வது என்ற கவலையில் இருக்கிறார்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அவங்களும் கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE