அதிகமே நம்மைக் கொல்லும்!

By காமதேனு

ஆசை

முதன்முதலில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது என்னை மலைக்கவைத்த, பயமுறுத்திய விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கூட்டம், வாகனங்கள், கட்டிடங்கள், கடைகள், கடைகளில் உள்ள பொருட்கள் என்று எதையெடுத்தாலும் மிதமிஞ்சிக் காணப்பட்ட நிலைதான்!

முதன்முதலில் சென்னைக்கு வந்து சட்டை, பேன்ட் எடுக்கப் போனபோது சரவணா ஸ்டோரைப் பார்த்து எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னுடைய அளவுக்கு நல்ல பேன்ட் வேண்டும் என்று கேட்டபோது வகைவகையாக என்னென்னவோ எடுத்துப் போட்டார்கள். 

ஊரில் இருந்தவரை எனக்குத் தெரிந்தது இரண்டுதான், ஒன்று சாதா பேன்ட். இன்னொன்று ஜீன்ஸ் பேன்ட். ஒரு பேன்ட் கேட்டதற்கு என் முன்னால் மலைபோல் குவித்துப் போட்டதும் எதை எடுப்பது என்று தெரியாமல் சங்கடத்துடன் வெகு நேரம் நின்றேன். இதைவிட உணவகங்களில் இன்னும் சிக்கல். ஒவ்வொரு முறையும் ஏதாவது வித்தியாசமாகச் சாப்பிட ஆசைப்பட்டு உணவுப்பட்டி யலை (மெனு) கேட்டு வாங்கிப் பார்த்தால் தோசை, இட்லி, சப்பாத்தி தவிர எதைப் பற்றியுமே தெரியாது. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE