கண்டு கொள்ளப்படாத கட்சியின் ஆணி வேர்- கஷ்ட ஜீவனத்தில் கழகப் பேச்சாளர்கள்!

By காமதேனு

“அமைச்சர் என்று சொல்லிக் கொள்வதைவிட திமுக பேச்சாளன் என்று சொல்லிக் கொள்வதுதான் எனக்குப் பெருமை. எனக்கு மட்டுமல்ல... தலைவர் கலைஞரும் அப்படிச் சொல்லிக் கொள்வதைத்தான் விரும்புவார்” அண்மையில் நடந்த திமுக பொதுக் குழுவில் பொருளாளராக தேர்வுசெய்யப்பட்ட துரைமுருகன் பேசிய பேச்சு இது. துரைமுருகனுக்கு பேச்சாளர் என்று சொல்லிக் கொள்வது பிடிக்கிறது. ஆனால், திமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர்களில் முக்கால்வாசிப் பேர் தங்களைப் பேச்சாளர் என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்களே!

பேச்சாளர்களின் கழகம்

 திமுக என்றாலே அது பேச்சாளர்களின் கழகம். திமுக-வினர் தங்கள் நாவன்மையை மூலதனமாகவும் கூரிய ஆயுதமாகவும் பயன்படுத்தித்தான் அண்ணா கண்ட இயக்கத்தைப் பட்டி தொட்டிகளிலும் பரப்பினார்கள். ஆட்சிக் கட்டிலிலும் அமர்த்தினார்கள். திமுக-வைத் தோற்றுவித்த அண்ணா தனது அற்புதமான பேச்சாற்றலின் மூலமாகத் தான் தம்பிகளை க் கொண்ட படையை அமைத்தார். அது தான் திமுக-வின் பல சேனையாக விளங்கியது. நெடுஞ்செழியன், கருணாநிதி, நாஞ்சில் மனோகரன், கே.ஏ. மதியழகன், டி.கே சீனிவாசன், என்.வி. நடராஜன், சத்தியவாணி முத்து என அண்ணா காலத்தில் இருந்த இந்தப் பேச்சாளர்கள் படையில் இருந்த அத்தனை பேருமே திறமைமிக்க தலைவர்களாகவும் இருந்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சியில் ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு இந்த மூவரும் தமிழகம் முழுவதும் இடி, மின்னல், மழை என்ற அடைமொழியுடன் முழங்கியதை தமிழகம் இன்னும் மறக்கவில்லை.

 அப்படியெல்லாம் இருந்த திமுக-வின் பிரச்சார சேனா இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட 300 பேர் இருப்பதாகச் சொல்கிறது திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் பட்டியல். ஆனால், அவர்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்தப் பேச்சாளர்களில் சிலர், தங்கள் உள்ளக் கொந்தளிப்பை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE