அவருக்கு ஒண்ணும் தெரியாது! தங்கள் கணவரைப் பற்றிப் பெரும்பான்மை மனைவிகளின் கருத்துக் கணிப்பு இதுதான். என் மனைவியைப் பொறுத்தவரை அவளின் செல்பேசி ரிங்டோனே இதுதான்.
வேலைக்காரம்மா லதாம்மாவிடம் “என்ன லதாம்மா நேற்று ஏன் வரலை?” என்று என் மனைவி கேட்க...
“நான் என் மாமியார் வீட்டுக்குப் போறேன்னு ஐயாகிட்டே சொல்லிட்டுப் போனேனே” என்று சொல்ல...
“அவருக்கு ஒண்ணும் தெரியாது. நீங்க எங்கிட்டத்தான் சொல்லணும்! இனிமே அவர்கிட்ட சொல்லிட்டேன்னு சாக்குப்போக்கு சொல்லாதீங்க...” என்று அலுத்துக்கொண்டாள்.