காதலைச் சுமந்து செல்லும் வாயேஜர்!- வேற்றுலகுக்கு பூமியின் செய்தி

By காமதேனு

இது, சூரியக் குடும்பத்தையும் தாண்டிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு காதல் செய்தியைப் பற்றிய கட்டுரை. அதோடு, வேற்றுகிரகவாசிகளுக்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்ட நட்பின் செய்தி பற்றிய கட்டுரையும்..!
விண்வெளியில் செலுத்தப்பட்ட வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய இரண்டு துழாவிகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்தத் துழாவிகள் சுமந்துசெல்லும் தங்கக் குறுந்தகடுகளில்தான் அந்தச் செய்திகள் இருக்கின்றன.

அந்தக் குறுந்தகடுகள்…

வாயேஜர் துழாவிகளை அனுப்பும் திட்டம் அதன் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்த வேளையில் புகழ்பெற்ற வானியலாளரும், அறிவியல் எழுத்தாளரும், நாஸாவின் ஆலோசகருமான கார்ல் சேகன் தலைமையிலான குழு ஒரு முடிவு எடுத்தது. சூரியக் குடும்பத்தையும் தாண்டிச் செல்லக்கூடிய இரண்டு வாயேஜர் துழாவிகளிலும் பூமியின் செய்தி அடங்கிய குறுந்தகடுகளை அனுப்புவதென்பதுதான் அந்த முடிவு. பூமியின் செய்தியை யாருக்கு அனுப்புவது? வேற்றுகிரகவாசிகளுக்குத்தான்!

இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் வாழ சாத்தியமுள்ள பல கிரகங்கள் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட கிரகத்தில் உயிர்கள் இருந்து, அதில் மனித இனத்தைவிட அதிக நாகரிக வளர்ச்சி பெற்ற ஜீவராசிகள் இருந்தால், அவர்கள் வாயேஜர் துழாவிகளைக் காண நேரிட்டால் அவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்துகொள்ளத்தான் இந்தக் குறுந்தகடுகள். என்ன... நூறு கோடி ஆண்டுகளுக்கு அப்படிப்பட்ட கிரகத்தை வாயேஜர் சென்று அடைய முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE