கழுத்துவலிக்குக் காரணம்!

By காமதேனு

முப்பது வருடங்களுக்கு முன்பு பட்டிதொட்டி எங்கும், ஆணும் பெண்ணும் தலையில் மண் கூடை, சாந்துச் சட்டி, தண்ணீர்க் குடம் சுமந்தார்கள்; களத்தில் தானிய மூட்டைகளைத் தூக்கினார்கள்; குளம், குட்டை, ஆற்றுக்குத் துணி மூட்டையைக் கொண்டுபோய்த் துவைத்தார்கள்; திருவிழாவுக்குச் செல்லும்போது, குழந்தைகளைத் தோளில் தூக்கிக்கொண்டார்கள். ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் கழுத்துவலி வந்து அதிகம் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை; கழுத்தில் ‘காலர்’ கட்ட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

‘நவீனத் தொழில்நுட்பம்’ என்னும் பெயரில் வீடு, வயல், ஆலை, அலுவலகம், வேலை சார்ந்த இடம் எனச் சகலத்திலும் ‘மெஷின்’கள் வந்து உட்கார்ந்துகொண்டதும், தலைச்சுமை வேலைகள் ரொம்பவே குறைந்துவிட்டன. ஆனாலும், இப்போதுதான் கழுத்தில் வலி வந்து  ‘காலர்’ கட்டிக்கொண்டவர்களை அதிகம் காண்கிறோம்.

என்ன காரணம்?

காட்டு வேலை, கட்டிட வேலை,  ரோட்டுவேலைக்குச் செல்கிறவர்கள் தொடங்கி,வீட்டுப் பெண்கள், பதின்பருவத்தினர்,அலுவலகம் செல்கிறவர்கள் வரை இன்றைய இளைஞர்களில் 75% பேர் கழுத்துவலிக்கு சிகிச்சை எடுப்பதாக‘ஜர்னல் ஆஃப் ஆர்த்தோபீடிக்ஸ்’ எனும்  பிரபல மருத்துவ இதழ் கருத்து  சொல்லியிருக்கிறது. அது எடுத்த  ‘சர்வே’யில், ‘கணினி, தொலைக் காட்சி, செல்போன்,டேப்லட் எனும் நவீன சூனியக்காரிகள் நான்கும் சேர்ந்து நாட்டில் வைத்திருக்கும் சூனியம் இது’ 
என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE