உங்க வீட்ல பேய் இண்டிகேட்டர் இருக்கா?!

By காமதேனு

சிரிப்பை மிஞ்சும் மருந்து ஏது!

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

“ஏக்கா... ஆயிரம் இருந்தாலும் நீ பண்ணுனது சரியில்லக்கா. மச்சானோட காலேஜ் ஃபிரெண்ட் வீட்டு ஃபங்ஷன். ரொம்ப நாளைக்குப் பெறவு சந்திக்காங்க. அதுக்குள்ள கிளப்பிட்டுப் போயிட்டி யேக்கா...?”ன்னு வைதேன். “அட கோட்டி யாரப்பயல... நீயும் உங்க மச்சான் மாரியே முட்டாக்கூவா இருக்கியேல... அந்த வீட்ல எத்தனை பேயிங்கிற? ஒரு பேய் அடுப்பாங்கரை மேல உட்கார்ந்து காலாட்டிக்கிட்டு கெடக்கு. இன்னொன்னு கண்ணாடி முன்னாடி நின்னு பவுடர் போட்டுக்கிட்டு இருக்கு. ஒரு குட்டிப்பிசாசு, என் பிள்ளை பக்கத்துல கால் நீட்டி உட்காந்து கிலுகிலுப்பையை ஆட்டிக்கிட்டு இருக்கு. அந்த வீட்ல எப்படி பச்சைப்பிள்ளைய வெச்சுக்கிட்டு இருக்கறது, சொல்லு?” என்றார் அக்கா.

அக்கா இப்படிச் சொன்னதும் எங்க தமிழ் வாத்தியார் ‘கலிங்கத்துப்பரணி’ பாடம் நடத்துனது ஞாவகத்துக்கு வந்திருச்சி. “பேயெல்லாம் பசியோட இருக்கும்போது, ஒரு பேய் வேகமா ஓடியாந்து சொல்லுச்சாம். ‘போர் நடந்த கலிங்க நாடு பூராம் ஒரே ரத்தமும், சதையுமாக் கிடக்கு ஓடியாங்க... ஓடியாங்க’ன்னு. ஒடனே, இடுப்புல இருந்த பிள்ளை நழுவுறதுகூட தெரியாம ஒரு பொம்பளப் பேயி குதியாட்டம் போட்டுச்சாம். கலிங்கத்து வீரர்களோட பற்களைப் பொறுக்கி, உரல்ல போட்டு போர்ல முறிஞ்ச யானை தந்தத்தை உலக்கையாக்கி நெல்லு மாதிரி குத்து னாங்களாம். அப்படியெடுத்த பல் லரிசியை வெச்சு பேய்க எல்லாம் கஞ்சி காச்சுச்சாம். ஆறப்பொறுக்காத இன்னொரு பேய் உலைக்குள்ள கையைவிட்டு கஞ்சி வெந்திருச்சான்னு ருசி பாக்க, வாய் வெந்து போச்சாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE