அசை போடும் சுகமே சுகம்
திரைபாரதி
readers@kamadenu.in
ஜெமினியின் மணிமகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் பல படங்களில் ஒன்று ‘சம்சாரம்’. ‘சந்திரலேகா’ படத்தின் சாதனை வெற்றியால் எஸ்.எஸ்.வாசனின் புகழ் இந்தியா முழுவதும் பரவியிருந்த நேரம். அந்தப் படத்துக்காகப் போடப்பட்ட செட்டின் ஒருபகுதியைப் பயன்படுத்தி ‘சம்சாரம்’ படத்தைத் தயாரித்து முடித்தார். எல்.வி.பிரசாத் இயக்கி தெலுங்கில் சக்கைபோடு போட்ட படமே ‘சம்சாரம்’. அப்படத்தின் தமிழ், இந்தி மொழிகளுக்கான ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார் வாசன். இதில், தமிழ்ப் படத்தை இயக்கும் பொறுப்பை தனது ஆஸ்தான எடிட்டர் சந்துருவிடம் அளித்தார். படம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக அமைந்தது. படத்தின் தலைப்புக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நடித்திருந்த புஷ்பவல்லியை அழைத்து 500 ரூபாயைச் சிறப்பு ஊதியமாக வழங்கினார் வாசன்.