உள்ளமும் உடலும் மலரட்டுமே
டாக்டர் கு. கணேசன்
gganesan95@gmail.com
சமீபத்தில் என் உறவுக்காரப் பெண்மணி ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில், தீவிர இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கப் போயிருந்தேன். முகத்தில் ஆக்ஸிஜன் ‘மாஸ்க்’கைப் பொருத்தியிருந்தனர். வென்டிலேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கையில் சலைன் ஏறிக்கொண்டிருந்தது. மறு கையில் சொட்டுச்சொட்டாக ரத்தம் இறங்கிக்கொண்டிருந்தது. நெஞ்சிலிருந்து கிளம்பிய வயர்கள் இசிஜி மானிட்டரில் இணைக்கப்பட்டிருந்தன. அதன் ‘பீப், பீப்’ சத்தத்தில் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு என மருத்துவர்களுக்கே புரியும் பல சங்கதிகள் மானிட்டர் திரையில் முக்கோணக் கோடுகளாக ஓடிக்கொண்டிருந்தன.