இனிமேல் பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டருக்கு வரும்! -யதார்த்தம் பேசுகிறார் இயக்குநர் பாண்டிராஜ்!

By காமதேனு

காட்சி விரிய... களிப்பு பிறக்கும்

கா.இசக்கி முத்து
esakkimuthu.k@kamadenu.in

கார்த்தியை வைத்து முற்றிலும் கிராமத்துப் பின்னணியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதன் இறுதிக்கட்டப் பணியில் பரபரப்பாக இருந்தவரை ‘காமதேனு’ இதழுக்காகச் சந்திக்கப் போனேன். ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில் பேசும் ஒரு முன்னோடி விவசாயியைப் போல பேச்சைத் தொடங்கினார். “வீட்டுக்குத் தேவையான வாழை, கத்திரிக்காய், தக்காளி, கீரை எல்லாத்தையும் வீட்டுத் தோட்டத்திலேயே பயிரிட்டு எடுத்துக்கிறேன். மீதமாகி விட்டால் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கடன் கொடுத்து, திரும்ப வாங்கிக்கிறேன். காலையில் வாக்கிங், ஜிம்னு வெட்டியா உழைக்கிறதுக்கு, தோட்டத்துல உருப்படியா உழைக்கலாம். வியர்வைக்கு வியர்வை, கூடவே உழைப்புக்கான பலன். ஊர்ல இருக்கிற மாதிரியான உணர்வும் வருது. வாழை குலை தள்ளிடுச்சா, முருங்கை மரம் எத்தனை காய்ச்சிருக்குன்னு தினமும் புத்துணர்வோடு விடியுது காலை” எனத் தான் சார்ந்திருக்கும் இயற்கையைப் பற்றிப் பேசிக்கொண்டே பேட்டிக்குத் தயாரானார் பாண்டிராஜ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE