ஆர்.ஷபிமுன்னா (shaffimunna.r@thehindutamil.co.in)
படங்கள்: ராஜீவ் பண்டிட்
இந்தியாவின் மிகத் தொன்மையான நாகரிகம் சிந்துசமவெளி நாகரிகம். இன்னமும் இதுகுறித்த அகழாய்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இது ஆரிய நாகரிகமா அல்லது திராவிட நாகரிகமா என்ற சர்ச்சையும் அவ்வப்போது வெடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் குதிரையையும் காளையையும் வைத்து இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை!
தலைநகர் டெல்லியிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் இருக்கிறது சனவுலி கிராமம். உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி மாவட்டமான பாக்பத்தில் வரும் இந்தக் கிராமத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தினர் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு ஒன்றை நடத்தினர். அந்த ஆய்வில் மன்னர் காலத்துப் பெரிய கல்லறைகள் எட்டு கிடைத்தன. இவற்றுடன், இதுவரை அகழாய்வு களில் கிடைத்திராத இன்னும் சில புதிய பொருட்களும் கிடைத்தன. இதற்கு மிக அருகிலேயே 2005-ல் நடந்த அகழாய்வில் மனித எலும்புக்கூடுகள் மொத்தமாய் கிடைத்தன.