கோடையில் ஒருநாள்..!- ரமேஷ் ரங்கநாதன்

By காமதேனு

‘ச்சந்த்ரூஊஊ..' சமையலறையிலிருந்து நித்யாவின் குரல் வர தமிழ் மக்கள் மேல் மத்திய அரசின் அடுத்த தாக்குதல் எதுவாக இருக்கும் என்று யோசித்து மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த நான் கையில் இருந்த செய்தித்தாளையும் கைபேசியையும் துறந்துவிட்டு உள்ளே விரைந்தேன். நான் ரவிச்சந்திரன். பொதுத்துறை வங்கி ஒன்றில் சட்ட ஆலோசக அதிகாரி. மனைவி நித்யா பன்னாட்டு வங்கியில் மனித வளத்துறையில் மேலாளர்.

“போனைத்தான நோண்டிட்டிருந்த?”

“இல்ல. பேப்பர் படிச்சுகிட்டே அப்படியே ஏதாவது வாட்ஸ்அப் மெசேஜ் இருக்கான்னு பாத்துகிட்டு இருந்தேன்” என்று வழிந்தேன்.

‘காலங்காத்தால உனக்கு யார் மெசேஜ் அனுப்பப் போறா? காலைல ஏதாவது ஹெல்ப் பண்றத விட்டுட்டு எப்பப் பாரு ட்விட்டர்லயே இரு! சரி. ஒரு குட் நியூஸ். எனக்கு ஆபீஸ்ல புது கார் லோன் சாங்ஷன் பண்ணிட் டாங்க. மாடல், கலர் செலக்ட் பண்ணிட்டா போதும். கார் வந்துடும்” என்றாள் நித்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE