கவி பாடும் காக்கிச்சட்டை!

By காமதேனு

மூன்றரை மாதங்களில் எட்டு விருதுகளை அள்ளியிருக்கிறார் செல்வராணி, தமிழ்ச் சொற்பொழிவாளர். மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் கவிச்செல்வா என்றால் பிரபலம். திருச்சி கே.கே.நகரிலிருக்கும் செல்வராணியின் வீடு விருதுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அத்தனையும் தமிழ் அரங்கங்களில் பெற்றவை. செல்வராணி திருச்சி ஐ.ஜி. அலுவலக நுண்ணறிவுப் பிரிவின் தலைமைக் காவலர் என்பது கூடுதல் சிறப்பு!

அவரைச் சந்தித்தபோது அலைபேசியின் பதிவை ஒலிக்கச் செய்தார். அதில், கோவலன் பிணமாகிக்கிடக்கும்போது கண்ணகியின் மனத்துயரத்தை கண்ணகியாகவே மாறி கண்ணீருடன் கவி படிக்கிறார். சமீபத்தில் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். அதில் ‘கதுவா’ சிறுமியாகவே மாறியிருக்கிறார். கவிதைகளின் பாத்திரங்களாக மாறிவிடுவது செல்வராணியின் பாணி. அரியலூர் மாவட்டம், கீழமைக்கேல்பட்டி கிராமத்தின் விவசாயக்கூலிக் குடும்பத்தில் பிறந்தவர் செல்வராணி. பள்ளிப் பருவத்திலேயே கவிதை பாடினார். ஆசிரியப் பயிற்சியை முடித்தவருக்கு, காவல்துறை வேலை காத்திருந்தது.

“எப்போதும் வண்டியில நோட்டும், பேனாவும் வெச்சிருப்பேன். எப்பல்லாம் தோணுதோ அங்கேயே வண்டியை நிறுத்தி எழுதிக்குவேன். நடுச்சாமத்துலகூட ஏதாவது தோணுச்சுன்னா, உடனே எழுந்திரிச்சு எழுதி வெச்சிடுவேன். முக்கியமான கவிதைகளைத் தொகுத்து, ‘கூட்டிப்பெருக்காத குப்பை நான்’ என்கிற தலைப்பில் அச்சுக்கு அனுப்பியிருக்கேன். அடுத்த தொகுப்பாக ‘குட்டையில் குளித்தவள்’ தயார். மூன்றாவதாக ‘என் எழுத்துக்கள் விற்பனைக்கு அல்ல’ வெளியாக இருக்கிறது” என்ற செல்வராணியிடம், “கட்டுப்பாடுகள் மிக்க காவல் துறையில் இருந்துகொண்டே தமிழரங்க மேடைகளில் எப்படி..?” என்றேன்.

“காவல் துறையினரும் மனிதர்கள்தானே. அவர்களுக்கும் எல்லோரையும்போல ரசனைகளும் நல்லுணர்வுகளும் இருக்கும். காக்கிச் சட்டை போட்டுக்கிட்டா, அதையெல்லாம் மூட்டைக்கட்டி வெச்சிடணும்னு அர்த்தம் கிடையாது. நல்ல விஷயங்களை எங்கள் துறை எப்போதும் ஆதரிச்சே வருது. அப்படித்தான் என்னையும் ஊக்கப்படுத்துறாங்க. இங்கே காவல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடிந்து வெளியேறுகிறவர்களுக்கான நிகழ்ச்சி மூணு நாள் நடக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE