இப்படியும் ஒரு தீண்டாமை

By காமதேனு

தூத்துக்குடியில் சிஐடியு அமைப்புடன் இணைக்கப்பட்ட  துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கு நகரில் யாரும் வாடகைக்கு வீடு தர முன்வருவதில்லை என்பதும் இதற்கு முக்கியக் காரணம். துப்புரவுத் தொழிலாளாருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் அரசுக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை இடிந்து விழும் நிலைக்கு வந்துவிட்டன. மிகச் சிலர் மட்டுமே இப்போது அந்தக் குடியிருப்புகளில் வசிக்கின்றனர். மற்றவர்கள் தொலைதூரத்திலிருந்து அன்றாடம் பணிக்கு வந்து செல்கின்றனர்.

மறுசுழற்சியின் மகத்துவம்

நகரங்களில் ஒவ்வொரு மனிதரும் பயன்படுத்தும் தண்ணீரில், 80% கழிவுநீராக வெளியேற்றப்படுகிறது. இப்படிச் சென்னையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை, மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் 2030-க்குள் மாநகரின் மொத்த தண்ணீர் தேவையில் 30 சதவீதத்தை சேமிக்க முடியும் என்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை ஆய்வு. இத்துடன், கிழக்கு கடற்கரைச் சாலையில் வரவுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமையவுள்ள நீர்த்தேக்க அணை ஆகியவையும் சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் போக்க பயனளிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வை நிகழ்த்திய மாணவர்கள் சொல்கிறார்கள். மறுசுழற்சி சரியாக நடந்து, இந்தத் திட்டங்களும் எதிர்பார்த்த பயனை அளித்தால், 2030-க்குள் சென்னையின் தண்ணீர்ப் பற்றாக்குறை 5 சதவீதமாகக் குறைத்து விடுமாம்.

ஊடகத்தினராலும் முடியும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE