ரத்த அழுத்தம்- என்ன  செய்ய வேண்டும்?

By காமதேனு

‘அடிக்கடி மயக்கம் வருகிறது; காரணம் தெரியவில்லை!’ எனச் சொல்லி, ஒரு கல்லூரி இளைஞனை என்னிடம் அழைத்துவந்தனர் பெற்றோர். ஆரம்பப் பரிசோதனைகளில் அவனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அடுத்து வந்த பரிசோதனை முடிவுகள் எல்லாம் நார்மல். முழுமையான விசாரணைக்குப் பிறகு காரணம் தெரிந்தது. அந்த இளைஞனுக்குச் சின்ன வயதிலிருந்தே காய்கறி சாப்பிடும் பழக்கம் துளியும் இல்லை! அந்தப் பழக்கம்தான் அவனுக்கு எதிரியாகிவிட்டது. பதின்பருவத்திலேயே ரத்த அழுத்தம் உச்சம் தொட்டது.

“காய்கறி சாப்பிடாவிட்டால் சத்துக்குறைவு ஏற்படும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ரத்தக்கொதிப்பும் வருமா? விசித்திரமாக இருக்கிறதே!” என்றனர், அந்தப் பெற்றோர். விளக்கம் சொன்னதும் திருப்தி அடைந்தனர்.

அந்த இளைஞன் மட்டுமல்ல, உணவு விஷயத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் அநேகருக்கும் பிடிக்காத அம்சம், ‘காய்களைச் சாப்பிடு’ என்று வீட்டில் வற்புறுத்துவதுதான். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள்…

‘காலையில் கொடுத்தனுப்பும் காயும் கறியும் சுவரில் எறிந்த பந்துபோல் அப்படியே டிபன் பாக்ஸில் திரும்பிவந்துவிடுகிறது!’ என்று புலம்பாதவர் களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE