துரைமுருகனைத் திருத்திய வீரமணி!

By காமதேனு

கடலூரில் நடந்த காவிரி உரிமை மீட்புப் பயண நிறைவு பொதுக்கூட்டத்தில், தொல்.திருமாவளவன், வைகோ, திருநாவுக்கரசரைத் தொடர்ந்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயலற்ற தன்மையைக் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது, “நீங்க எல்லாம் ஆம்பளையா?” என்ற வார்த்தையை அவர் உபயோகித்தார். மேடையின் எதிரே அமர்ந்திருந்த கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, கீதாஜீவன் உள்ளிட்ட திமுக பெண் நிர்வாகிகள் கவலையோடு பார்த்தார்கள். அடுத்து மைக்பிடித்த திக தலைவர் கி.வீரமணி தனது பேச்சில் அதற்குப் பதிலடி கொடுத்தார். “அந்த வார்த்தையை துரைமுருகன் பயன்படுத்தியிருக்கக் கூடாது. ஆண் என்றால் திறமையானவன் என்று அர்த்தம் தொணிக்கும் வகையில் பெரியாரின் தொண்

டர்கள் பேசக் கூடாது. ஆண், பெண், மூன்றாம் பாலினம் யாராக இருந்தாலும் சிறப்பாகச் செயலாற்ற முடியும்” என்று அவர் சொல்ல, அதனைப் பெண்கள் அனைவரும் கைதட்டி ஆமோதித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE