ரத்த அழுத்தம் எகிறுவது ஏன்?

By காமதேனு

இன்றைய தினம், தொற்றாநோய்களின் கூட்டத்தில், தலைமை ஏற்கும் விதத்தில் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறது, ரத்தக்கொதிப்பு. பல நேரங்களில் பலத்த காற்றுதானே என்று அலட்சியமாக இருப்போம். அது திடீரென்று சூறாவளியாகச் சுழற்றி அடித்து நம்மைச் சாய்த்துவிடும். அதுபோலத்தான் ரத்தக்கொதிப்பும். நாம் சாதாரணமாக நினைக்கும் ரத்தக்கொதிப்பு, உடலுக்குள் பூதாகரமாக வளர்ந்து ஆபத்தான கட்டத்துக்குத் தள்ளிவிடும் ஒரு ‘சூறாவளி’!

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை, ஐம்பது வயதைக் கடந்தவர்களிடம் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தச் சூறாவளி, தற்போது நள்ளிரவு தாண்டியும் மடியில் மடிக்கணினியைக் கட்டிக்கொண்டு அழும் ஐடி இளைஞர்களை நோக்கி நகர்ந்துள்ளது என்றால், என்ன காரணம்?

லைஃப் ஸ்டைல்!

பதின்பருவத்தை அடைந்த ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்பது நார்மல். இது 139/89 வரை போகலாம். ஆனால், இதைத் தாண்டி, ஒரு பாய்ண்ட் எகிறினாலும் அது ரத்தக்கொதிப்பு என்ற எல்லைக்குள் கால் வைத்துவிட்டதாகவே அர்த்தம். உடனே மாத்திரை எடுத்துக்கொள்ள தயாராகிவிட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE