மயில் மார்க் குடைகள் - இரா.முருகன்

By காமதேனு

பார்கவி எட்டு மணிக்கே வந்தாகிவிட்டது.

ரெக்கார்டிங் ஸ்டுடியோ என்று விலாசம் கொடுத்திருந்தாலும் அது குடியிருக்கும் வீட்டில் திரை போட்டு மறைத்த, சுவரில் பஞ்சு ஒட்டிய அறைதான். மரத்தடுப்புக்கு அப்பால் பழைய க்ரண்டிக் ஸ்பூல் டேப் ரெக்கார்டரை நடுநாயகமாக வைத்து ஒரு மேஜை இருந்தது. துருப் பிடித்த மைக் ஒன்று தடுப்புக்கு இப்பக்கம் தரையில் நின்றது.

திரை அசைந்தது. பின்னாலிருந்து நைட்டி அணிந்து பச்சைத் துண்டு போர்த்திய ஒரு பெண் எட்டிப் பார்த்து, “இருக்கச் சொன்னார்” என்றாள். “வாங்க, குருநாதன் அனுப்பிச்சாரா?”, திரையை விலக்கிக்கொண்டு வந்தவன் கட்டை குட்டையாக, இடுப்பில் நிஜாரும் மேலே ஈரமான குற்றாலத் துண்டுமாக இருந்தான். சந்தன சோப் வாடை அவனிடமிருந்து அறை எங்கும் சூழ்ந்தது. குருநாதன்தான் அனுப்பி வைத்ததாகச் சொன்னாள் பார்கவி. மேலெழுந்து வந்த இருமலை ஜாக்கிரதையாக அடக்கிக்கொண்டாள் அவள்.

“வயலின்காரருக்குச் சொல்லியிருக்கேன். வந்திடுவாரு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. சுடுதண்ணி தரச் சொல்லட்டா?”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE