தகுதியான தமிழர்களே கிடைக்கவில்லையா?

By காமதேனு

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு வேற்று மாநிலத்தவர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாகக் காலியாக இருந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரிநியமிக்கப்பட்டார்.

அதேபோல தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்துக்கும் கேரளத்தைச் சேர்ந்த பிரமிளா குருமூர்த்தியை நியமித்தார்கள். இப்படித் தமிழகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் உயர்பதவிகள், வெளிமாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்கப்படுவது தொடர்கிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 விண்ணப்பங்கள் வந்தன. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான தேர்வுக்குழு மூன்று கட்டத் தேர்வுகளில் 140 விண்ணப்பங்களை நிராகரித்தது. இறுதியாக ஆறு பேர் தேர்வுசெய்யப்பட்டு ராஜ்பவனில் நேர்காணல் செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE