புற்றுநோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை!

By காமதேனு

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய சில ரத்தப் பரிசோதனைகளும் கைகொடுக்கின்றன என்று சென்ற இதழுக்கு முந்தைய இதழில் கூறியிருந்தேன்.

அதை இப்போது பார்க்கலாம்.

புற்றுநோயை முன்கூட்டியே அறிவிக்கும் ‘அறிவிப்பாளர்’களில் ‘பி.ஆர்.சி.ஏ1/ பி.ஆர்.சி.ஏ2’ (BRCA1/BRCA2) பரிசோதனைகள்தான் விஐபிகள்! இவற்றின் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கு வாய்ப்புள்ளதா என முன்னரே அறியலாம். சினைப்பைப் புற்றுநோய் (Ovarian cancer) மறுபடியும் தோன்றுகிறதா என்பதை அறிய ‘சி.ஏ.–125’ பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் இருந்தால் ‘பி.எஸ்.ஏ.’ (PSA) ரத்தப் பரிசோதனையில் அறியலாம். புற்றுநோய் உள்ளவர்களுக்கு பி.எஸ்.ஏ.அளவு அதிகரிக்கும். அதே நேரத்தில் புற்றுநோய் அல்லாத வேறுசில நோய்களின் போதும் இதன் அளவு அதிகரிக்கும். எனவே, எச்சரிக்கையுடன்தான் இதைப் பயன்படுத்த வேண்டும். புராஸ்டேட் புற்றுநோய் வந்தவர் சிகிச்சையில் இருந்தால், அது எந்த அளவுக்கு நோயைக் குணப்படுத்துகிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE