ஈரோடு களைகட்டியிருக்கிறது. மார்ச் 24, 25 தேதிகளில் திமுக நடத்தவிருக்கும் மண்டல மாநாடு ஏற்பாடுகளே காரணம். மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆன பிறகு நடக்கும் முதல் மாநாடு என்பதால், மண்டல மாநாடு என்கிற எல்லையைத் தாண்டியதாக இருக்கும் என்கிறார்கள்.
470 ஏக்கர் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கம், பத்து லட்சம் பேர் வரக்கூடிய சாத்தியத்தைச் சொல்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தின் சுமார் 50 சட்ட மன்றத் தொகுதிகளில் வெறும் 5 தொகுதிகளை மட்டுமே திமுகவால் வெல்ல முடிந்தது. அதை மாற்றுவதே இதன் முதன்மை இலக்காம். ஒரு நல்ல விஷயம், ஃப்ளெக்ஸ் பேனருக்குக் கறார் தடை விதித்திருக்கிறார் ஸ்டாலின்!