சென்னை: அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 164 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நேற்று வரை 1.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள் ளனர். மேலும் இந்த மாதம் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்பதால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டும். அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுஅதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக் கிறது.
ஆனால், விண்ணப்பதாரர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க தமிழக அரசு எந்தநடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. தமிழக அரசுகல்லூரிகளில் 140 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1.07 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே உள்ளன. இது விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறை வாகும்.
விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில்மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் உயர்த்தினாலும் கூட விண்ணப்பித்த மாணவர்களில் 40 விழுக்காட்டினருக்குக் கூட அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காது. அதேபோல கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் செயற்கைநுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகள் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகளில் இன்னும் தொடங்கப்படாதது மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
» சென்னை ஐஐடியில் சர்வதேச இசை, கலாச்சார மாநாடு: மே 20 முதல் 26 வரை நடைபெறுகிறது
» வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
எனவே தமிழக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். நடப்பாண்டில் 50 கல்லூரிகளிலாவது செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்