ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி போட்டியில் நடந்து முடிந்த 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்து, டிராபியை இழந்தது இந்தியா. இந்த வெற்றியின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.