சென்னை: 12-ஆவது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று சாதனையைப் படைத்துள்ள பவானி தேவியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதின் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘12-ஆவது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானி தேவியை வாழ்த்தி மகிழ்கிறோம்.
ஒலிம்பிக் வீராங்கனையான தங்கை பவானி தேவி, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் (ELITE) திட்ட வீராங்கனை என்பது கூடுதல் சிறப்பு.
திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் தங்கை பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம். அவருக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்
» ராஜபாளையம் அதிர்ச்சி: துணிக்கடையில் எஸ்.ஐ மனைவி மீது மிளகாய் பொடி தூவி செயின் பறிப்பு
» கேப்டன் ஆனார் பும்ரா - 5 வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் ஷர்மா விலகல்!