முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கெனவே 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 455 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் 2ம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமான நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.