இன்று இறுதிப்போட்டி: மகளிர் ஜூனியர் ஆசிய ஆக்கியில் இந்தியா - சீனா மோதல்!

By KU BUREAU

இன்று மகளிர் ஜூனியர் ஆசிய ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா ஜூனியர் ஆக்கி மகளிர் அணியும், சீனா மகளிர் அணியும் மோதுகின்றனர். இன்று இரவு 8.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் 21 வயதுக்குட்பட்டோருக்கான 9வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டு, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனா மகளிர் அணி, தென்கொரியா அணியை எதிர்கொண்டு 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மோதுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE