பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: 13.2 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது

By KU BUREAU

பிரிஸ்பன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் முதல்நாள் ஆட்டம் 13.2 ஓவர்களுடன் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்தது.

பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்ஷித் ராணா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ்தீப், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்டுக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் களமிறங்கினார்.

பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா, நேதன்மெக்ஸ்வீனிஆகி யோர் நிதானமான தொடக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. மேற்கு கொண்டு 35 நிமிடங்கள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 47 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களும், நேதன் மெக்ஸ்வீனி 33 பந்துகளில், 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கனமழை பெய்ததால் ஆடுகளம் குளம் போன்று மாறியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தேநீர் இடைவேளைக்கு பின்னர் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

மழையால் முதல் நாள் ஆட்டத்தில் சுமார் 76 ஓவர்கள் வீச முடியாமல் போனதால் எஞ்சிய 4 நாட்கள் ஆட்டமும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக தொடங்கப்படும் எனவும் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 98 ஓவர் கள்வரை வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பனில் இன்று வானிலை சிறப்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திங்கள்கிழமை அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்கள் தடுமாற்றம்: பிரிஸ்பனில் கடந்த ஒருவாரம் மழை பெய்தது. இதனால் பந்துகளில் அதிக நகர்வு இருக்கும் என்று கருதியே ரோஹித் சர்மா டாஸை வென்ற தும் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் ஜஸ்பிரீத் பும்ராவும், முகமது சிராஜும் சரியான நீளத்தை கண்டுபிடித்து வீசுவதில் தடுமாற்றம் அடைந்தனர். பும்ரா 6 ஓவர்களை வீசிய போதிலும் விக்கெட்களை கைப்பற்றுவதற்கான பந்துகளை அவர், வீசவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் உஸ்மான் கவாஜா, உடலை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை மட்டுமே அடித்து ரன்கள் சேர்த்தார்.

பெரும்பாலும் அவர், மட்டையை உடலுடன் இணைத்தவாறு பேட் செய்தார். இதனால் விலகிச் செல்லும் பந்துகளை அவர், தொடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களில் மழையால் நிறுத்தப் பட்டது. மழை நின்றவுடன் 30 நிமிடங்களுக்கு பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்ட போது முகமது சிராஜை நிறுத்திவிட்டு ஆகாஷ் தீப்பை கொண்டுவந்தார் ரோஹித் சர்மா.

அவர், சரியான நீளத்தை கண்டுபிடித்து, சீம் நகர்வுகளுடன் பந்துகளை வீசி அழுத்தம் கொடுத்தார். அவர், 3.2 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் மீண்டும் குறுக்கிட்ட மழையால் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்றைய ஆட்டத்தில் ஆகாஷ்தீப், ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE