உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் குகேஷ் - சீனாவின் டிங் லிரனை வீழ்த்தினார்!

By KU BUREAU

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்று தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் ஆகியிருக்கிறார்

சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன் மோதினர். இதுவரை நடந்த 13 சுற்றுப் போட்டிகளில் குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வெற்றியை பெற்றிருந்தனர். மீதம் நடந்த 9 போட்டிகள் டிராவில் முடிவடைந்ததால், இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் இருந்தனர். இந்த நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் கடைசி சுற்று இன்று நடைபெற்றது. இதில் வெள்ளி நிற காய்களுடன் சீனாவின் டிங் லிரனும், குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கினார்.

இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், குகேஷ் செய்த 13வது நகர்த்தல் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்தடுத்த நகர்த்தலில் குகேஷ் சுதாரித்து கொண்டு கம்பேக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் ஆட்டம் டிராவை நோக்கி நகர்வது போல தெரிந்தது. இறுதியாக 55வது நகர்த்தலில் டிங் லிரன் தோல்வியை ஒப்புக்கொள்ள, தமிழ்நாட்டின் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE