நியூஸிலாந்து அணி தடுமாற்றம்

By KU BUREAU

வெலிங்டன்: நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 54.4 ஓவர்களில் 280 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 115 பந்துகளில், 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 8-வது சதமாக அமைந்தது. ஆலி போப் 66, கிறிஸ் வோக்ஸ் 18 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் நேதன் ஸ்மித் 4, வில் ஓ’ரூர்க்கி 3, மேட் ஹென்றி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 26 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 17, டேவன் கான்வே 11, கேன் வில்லியம்சன் 37, ரச்சின் ரவீந்திரா 3, டேரில் மிட்செல் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். வில் ஓ’ரூர்க்கி ரன் ஏதும் எடுக்காமலும், டாம் பிளண்டெல் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 194 ரன்கள் பின்தங்கியுள்ள நியூஸிலாந்து அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE