இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெலங்கானா டிஎஸ்பி-யாக பதவியேற்றார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு தெலங்கானா மாநில அரசு குரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக (போலீஸ் டிஎஸ்பி) முகமது சிராஜ் பதவியேற்றுக் கொண்டார்.